கொலைமிரட்டல் விடுத்த ஜி.பி.முத்து... போலீசில் பிரபல நடிகர் பரபரப்பு புகார்..!

By manimegalai aFirst Published Aug 6, 2021, 11:54 AM IST
Highlights

'டிக்டாக்' மூலம் பிரபலமான ஜி.பி. முத்து உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளம் மூலமாக கொலை மிரட்டல் விடுவதாக காதல் படத்தின் மூலம் பிரபலமான சுகுமார், போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 

'டிக்டாக்' மூலம் பிரபலமான ஜி.பி. முத்து உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளம் மூலமாக கொலை மிரட்டல் விடுவதாக காதல் படத்தின் மூலம் பிரபலமான சுகுமார், போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

'சக்தி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் காதல் படத்தின் மூலம், அனைவராலும் நன்கு அறியப்பட்ட காதல் சுகுமார். தமிழில் சுமார் 30 க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர். மேலும் திருட்டு VCD , சும்மாவே ஆடுவோம் ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆபாசமாக பேசி வரும் சிலர் தனக்கு கொலைமிரட்டல் விடுவதாக போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... 'கொரோனா பேரிடர் காலங்களில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிப்பது சாத்தியம் இல்லாமல் போனதால், போன்கள் மூலம் ஆன்லைன் கல்வி கற்று வருகிறார்கள். இப்படி ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்றுக்கொள்ள செல் போன்களை பயன்படுத்தும் போது... சமூகவலைத்தளங்களில் பிரபலமாக உள்ள இலக்கியா, ஜிபி முத்து போன்றவர்கள் தவறான, ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

இதனால் அவர்கள் மேல் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுசெயலாளர் ஏழுமலை, டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளோம். இது பற்றி ஊடகங்களில் நானும் என்னுடைய கருத்தை தெரிவித்திருந்தேன். இதனால் நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி முத்து உள்ளிட்டோர் இணையம் வழியாக எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காதல் சுகுமார் கூறியுள்ளார்.

அதே போல் இது போன்ற ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி, தங்களை பிரபல படுத்திக்கொள்ளும் சிலரது சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இது போன்ற புகார்களை மையப்படுத்தி, டிக் டாக் சூர்யா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில்... இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

click me!