இது சிம்புவா? அழுக்கு சட்டை... கைலியுடன் வெளியானது "வெந்து தணிந்தது காடு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

By manimegalai aFirst Published Aug 6, 2021, 12:54 PM IST
Highlights

நடிகர் சிம்புவின் 47 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பார்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

நடிகர் சிம்புவின் 47 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பார்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் சிம்பு கடைசியாக இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது கூட்டணி எப்போது இணையும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சிம்பு சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும், தன்னுடைய 47 ஆவது படத்தை கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பார்பவர்களையே... இது சிம்புவா என அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் படத்திற்கு மிகவும் வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

'வெந்து தணிந்தது காடு' என்று டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். அழுக்கு சட்டை, கைலி கட்டியபடி கையில் ஒரு சொரட்டு கோல் வைத்துள்ளார். மேலும் அவர் நிற்கும் இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை கெளதம் மேனன் இயக்கிய படங்களில் இருந்து இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படக்குழு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Here’s the title and first look of the new film with

Thank you to everybody who made this possible pic.twitter.com/6LY9icJuSd

— Gauthamvasudevmenon (@menongautham)

click me!