நயன்தாரா... அவள் நயாகரா... 'அவளுக்காக உலகையே வாங்கலாம்'... கவிதையில் உருகிய நாஞ்சில் சம்பத்!!

Published : Aug 07, 2021, 03:59 PM IST
நயன்தாரா... அவள் நயாகரா... 'அவளுக்காக உலகையே வாங்கலாம்'... கவிதையில் உருகிய நாஞ்சில் சம்பத்!!

சுருக்கம்

நடிகை நயன்தாராவை நயாகரா அருவியுடன் ஒப்பிட்டு... கவிதை மழையை பொழிந்துள்ளார், அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்.  

நடிகை நயன்தாராவை நயாகரா அருவியுடன் ஒப்பிட்டு... கவிதை மழையை பொழிந்துள்ளார், அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பலர் வந்த வேகத்தில் சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் நிலையில், சும்மா கிள்ளியாக 15 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக மட்டுமே நடித்து தனக்கான மார்க்கெட்டை சரிய விடாமல், ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளவர் நயன்தாரா. 

இவர் அறிமுகமாகும் போது, இந்த அளவுக்கு இவர் வளர்வார் என பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதே போல் பல சர்ச்சைகள் மற்றும் காதல் தோல்விகளில் துவண்டாலும் அதில் இருந்து மீண்டு இன்று நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும், தொழிலில் முதலீடு செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறார் நயன்தாரா. முன்னணி கதாநாயகர்களுக்கு நிகராக இவரை மட்டுமே நம்பி படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் போட்டி போட்டு நிற்கின்றனர்.

ஆனால் நயன்தாரா கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி தன்னுடைய மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். தற்போது தமிழில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ள இவர், விரைவில் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை முடித்து கொடுத்து விட்டு, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இன்னும் நான்கு படங்களில் இவர் அடுத்தடுத்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

இப்படி ஓய்வே இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா... குறித்து நாசில் சம்பத்  கூறியுள்ள கருத்தும்... கவிதையும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பிரபல அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், நயன்தாரா குறித்து கவிதை ஒன்றை கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிக்கு அவர் அளித்த பேட்டியின் போது நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர்... "நயன்தாரா தமிழ்நாட்டின் திரை வரலாற்றில் அதிசயம் செய்தவர்! பொதுவாக நடிகைககள் 2 படங்களில் ஜொலிப்பார்கள். பின்னர் தூக்கி வீசப்படுவார்கள். யாராலும் தூக்கி வீசமுடியாத அளவிற்கு தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திய அதிசயத்திற்கு பெயர் நயன்தாரா,'' என நயன்தாராவிற்கு நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினார்.

அதைத் தொடர்ந்து நயன்தாராவிற்கு பற்றி இவர் கவிதை ஒன்றையும் கூறியுள்ளார். 'நயன்தாரா... அவள் நயாகரா.. அதில் நனைய பலர் விரும்புகிறார்கள்... ஆனால் நயாகராவில் நனைய அனுமதியில்லை!
நயன்தாரா... எதையும் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு எனக்கு வசதியில்லை!  ஆனால் நயன்தாராவுக்கு கொடுக்க உலகத்தை வாங்கலாமா என ஆசைப்படுகிறேன்!'' என கவிதையால் உருகியுள்ளார். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!