venkat Prabhu : சமீபத்திய பேட்டியில், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இசையில் இளையராஜாவும், கங்கை அமரனும் மீண்டும் இணைவார்களா என கேள்வி கேட்கப்பட்டது.
மங்காத்தா மூலம் பேமஸ் ஆன வெங்கட் பிரபு
‘ஏப்ரல் மாதத்தில்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இதையடுத்து ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசான ‘சென்னை 28’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
undefined
கிரிக்கெட் மற்றும் நட்பை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் சரோஜா, கோவா என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, கடந்த 2011-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
மாநாடு ரூ.100 கோடி வசூல்
இதன்பின்னர் கார்த்தியை வைத்து பிரியாணி, சூர்யா நடிப்பில் மாஸ் என இவர் இயக்கிய படங்கள் அடுத்தடுத்து ஃபிளாப் ஆகின. இதையடுத்து சென்னை 28 படக்குழுவினருடன் மீண்டும் கூட்டணி அமைத்த வெங்கட் பிரபு, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியதன் மூலம், வெற்றிபாதைக்கு திரும்பினார்.
சிம்புவின் மாநாடு படத்தை இயக்க கமிட்டான வெங்கட் பிரபு, பல்வேறு தடைகளைக் கடந்து சுமார் 3 ஆண்டுகள் போராடி அப்படத்தை எடுத்து முடித்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்தாண்டு வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸிலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இசையில் இளையராஜா - கங்கை அமரன் இணைவார்களா?
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மன்மதலீலை’. அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமாக தயாராகி உள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்திய பேட்டியில், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இசையில் இளையராஜாவும், கங்கை அமரனும் மீண்டும் இணைவார்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், விரைவில் என் படத்தின் மூலம் அப்பாவும், இளையராஜாவும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்” எனக்கூறினார்.
இதையும் படியுங்கள்... Indhuja : குஷி ஜோதிகா போல் சேலையில் பளீச் என இடுப்பை காட்டி பரவசமூட்டும் இந்துஜா... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்