Ram charan: படத்தின் வெற்றியே தனது பிறந்தநாள் பரிசு! ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் குறித்து ராம்சரண் நெகிழ்ச்சி பதிவு

Anija Kannan   | Asianet News
Published : Mar 27, 2022, 01:13 PM IST
Ram charan: படத்தின் வெற்றியே தனது பிறந்தநாள் பரிசு! ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் குறித்து ராம்சரண் நெகிழ்ச்சி பதிவு

சுருக்கம்

Ram Charan's birthday: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கான பாராட்டுகளுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார்  ராம்சரண் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கான பாராட்டுகளுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார்  ராம்சரண் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பாகுபலியின் வெற்றிக்கு பிறகு, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

ஆர்.ஆர்.ஆர்:

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.  


 
ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் 1 படம் என்ற சாதனையை படைத்தது.இந்த படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கதைக்களம்:

1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனை கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர்.

வசூல் விவரம்:

கொரேனா காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்துள்ளது. அதன்படி பாகுபலி படத்தை விட இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் படிக்க... .Alya: ஆல்யா மானசாவிற்கு 2-வது குழந்தை பிறந்தது... மீண்டும் அப்பாவான குஷியில் சஞ்சீவ் - குவியும் வாழ்த்துக்கள்

தனது 38 வது பிறந்தநாளில் நெகிழ்ச்சியில் ராம் சரண்:

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் வெற்றியை தொடர்ந்து..ராம் சரண் தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

இதற்கு நன்றி தெரிவித்த ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், , ''ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கான அபரிமிதமான பாராட்டுகளுக்கும், அன்புக்கும் நன்றி..இந்த மிக சிறந்த பிறந்தநாள் பரிசை நான் பணிவன்புடன் ஏற்று கொள்கிறேன்''. என்று கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!