Alya manasa: ஆல்யா மானசா இரண்டாவது முறையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து ஆல்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவி சின்னத்திரை நடிகை, ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர். “ராஜா ராணி 1” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர், “ராஜா ராணி 2 சீரியலில் நடிகையாக வலம் வந்தவர்.
சஞ்சீவ் ஆல்யா ஜோடி:
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவ் ஆல்யா தம்பதி. ராஜா ராணி சீரியலில் இருவருக்கும் காதலி மலர்ந்து, பின்னர் கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு, ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கிறார். இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார் ஆல்யா மானசா.
சீரியலில் இருந்து வெளியேறிய ஆல்யா:
ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, முக்கிய நாயகியாக நடித்து வந்தார். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோதும், நடித்து வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை நடித்துள்ளார்.
ஆல்யா மானசா சீமந்தம்:
அண்மையில் அவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ரியா என்பவர் சந்தியா வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இனி நான் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க வரவே மாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக' கூறியிருந்தார் ஆல்யா மானசா.
சமீபத்தில், ஆல்யா மானசாவின் சீமந்தம் நடந்து முடிக்க உடனே அவர்களது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள், எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது.
ஆல்யாவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை:
இந்நிலையில், ஆல்யா மானசா இரண்டாவது முறையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து ஆல்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ நாங்கள் ஆண்குழந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். தாயும் சேயும் நலமாக இருக்கிறோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். புகைப்படம் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.