
விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணி
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இது ரஜினியின் 169-வது படம் என்பதால் தற்காலிகமாக இப்படத்தை தலைவர் 169 என அழைத்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
தலைவர் 169 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு மகளாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
தலைப்பு என்ன?
இந்நிலையில், தலைவர் 169 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் கடைசியாக இயக்கிய இரண்டு படங்களுக்கும் டாக்டர், பீஸ்ட் என ஆங்கிலத் தலைப்பை தான் வைத்திருந்தார். இதனால் தான் அடுத்ததாக இயக்க உள்ள தலைவர் 169 படத்துக்கும் அவர் ஆங்கிலத்தில் தான் தலைப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதவிர பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Beast movie : பீஸ்ட் படத்தின் பெயர் திடீரென மாற்றப்பட்டதால் ஷாக் ஆன ரசிகர்கள் - புது பெயர் என்ன தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.