RRR movie: வலிமை, சர்கார் படங்களின் மொத்த வசூலை... RRR இரண்டே நாளில் முறியடித்து ரூ.340 கோடி வசூல் சாதனை..!

By Anu Kan  |  First Published Mar 27, 2022, 11:05 AM IST

RRR movie box office collection: ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வெளியான இரண்டே நாளில் ரூ.340 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது.


ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வெளியான இரண்டே நாளில் ரூ.340 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான பாகுபலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயங்கிய, ராஜமௌலி,  'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தை 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார். 

Tap to resize

Latest Videos

நட்சத்திர பட்டாளங்கள்:

 ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், தெலுங்கில் இரு பெரும் நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.மேலும், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என  பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ரிலீஸ்:

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டியது. கொரேனா காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படத்தில், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களையும் ரசிகர்களிடம் பேராதரவையும் பெற்று வருகிறது.  இதையடுத்து, ஆர்.ஆர்.ஆர் படத்தின், வசூல் விவரம் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. தற்போது அந்த வரிசையில் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

இரண்டாம் நாள் வசூலில் சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர் படம்:

உலகம் முழுவதும் வெளியான  RRR திரைப்படம், முதல் நாள் மட்டுமே ரூ 248 கோடி வசூல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாகுபலி படத்தை விட இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி இப்படம் உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்துள்ளது, இதன்மூலம் வலிமை, திரைப்படம் சர்கார் படங்களின் ஒட்டுமொத்த வசூலையும் 2 நாட்களில் ஆர். ஆர்.ஆர்திரைப்படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 மேலும் படிக்க....Valimai ott streaming records: ஓடிடியில் வெளியான ஒரே நாளில் வலிமை தந்த மவுசு...ரசிகர்கள் படு குஷி..!

click me!