Ram Charan's birthday: ஆர்.ஆர்.ஆர் வெற்றியை தொடர்ந்து... அடுத்த கொண்டாட்டத்தில் இறங்கிய ராம் சரண்...

By Anu Kan  |  First Published Mar 27, 2022, 7:10 AM IST

Ram Charan's birthday: தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் தனது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 


தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் தனது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகராக வலம் வரும் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், மாவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து, நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

ஆர்ஆர்ஆர் திரைப்படம்:

தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படம், நேற்று முன்தினம் (மார்ச் 25 ம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

நட்சத்திர பட்டாளங்கள்:

ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் 1 படம் என்ற சாதனையை படைத்தது. கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என  பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ராம்சரண்:

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில்,  பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர், ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடித்த இருந்தனர்.

ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் ராமராக நடிக்க காரணம், 1897 ஆம் ஆண்டு பிறந்த அல்லூரி சீதாராமன் ராஜு தனது 18 வயதில் துறவியாக மாறினார். அதன்பிறகு 27 வயதில் பழங்குடி மக்களின் போராட்டத்திற்காக ஆங்கிலேய கிறிஸ்தவர்களில் மரத்தால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இப்படம் எடுக்கப்பட்டது. 

எனவே தான், ராம்சரண் இப்படத்தில் பிரிட்டிஷ் காவலாளியாக காண்பிக்கப்பட்ட இருப்பார். இப்படத்தின் இறுதியில் ராமர் போல் காட்சி அளித்து வில் அம்பு எய்தி வில்லனை ராம்சரண் கொள்ளுவார்.

ஒரே நாளில் ரூ 248 கோடி வசூல் :

ராஜமௌலியின் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்ட தயாரிக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படம், வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. ஆர்ஆர்ஆர் படம் வெளியான ஒரே நாளில்  ரூ 248 கோடி வசூல் வசூலித்து மாபெரும் சாதனை புரிந்தது. 

எனவே, ஆர்.ஆர்.ஆர் வெற்றியை தொடர்ந்து..ராம் சரண் தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

 மேலும் படிக்க...RRR Australia box office: மாஸ்டர் வசூலை ஓரம் கட்டிய ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம்..வசூல் விவரம் தெரியுமா..?

 

click me!