விட்ட மார்க்கெட்டை பிடிக்க புது ரூட்...8 வருடத்திற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காததை செய்யும் பிரபல இயக்குநர்!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 23, 2020, 12:46 PM IST

சமீபகாலமாக விக்ரம் பிரபுவிற்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட்டே இல்லை, லட்சுமி மேனனையும், ஸ்ரீதிவ்யாவையும் ரசிகர்கள் மறந்தே போய்விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். 


“சுந்தர பாண்டியன்”, “கும்கி”வ்போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை லட்சுமி மேனன் நடிப்பில் கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு “றெக்க” படம் வெளியானது. இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த “யங் மங் சங்” படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. பின் படவாய்ப்புகள் சரிவர அமையாததால், மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சை காட்டினார் லட்சுமி மேனன்.

Latest Videos

தற்போது 4 வருடங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்க உள்ள லட்சுமி மேனன், டபுள்  ஹீரோயின் கதையம்சம் கொண்ட பிரபல இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யாவும் ஜீவாவுடன் ஜோடி போட்ட “சங்கிலி புங்கிலி காதவதொர” என்ற ஒரு படத்தில் சறுக்கினார். தற்போது வரை மீள முடியாமல் தவித்து வரும் இவர் தான் இந்த படத்தில் இன்னொரு ஹீரோயின். 

படத்தை இயக்க உள்ள பிரபல இயக்குநர் சுசீந்தீரன், இயக்கத்தில் சமீபத்தில் வெளியான எந்த படங்களும் சரியாக ஓடவில்லை. அதனால் எப்படியாவது ஒரு ஹிட்டு படம் கொடுத்தாக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு மார்க்கெட் போன நடிகைகளை களம் இறங்க திட்டமிட்டுள்ளது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் சுசீந்திரனின் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க போவது நடிகர் விக்ரம் பிரபு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக விக்ரம் பிரபுவிற்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட்டே இல்லை, லட்சுமி மேனனையும், ஸ்ரீதிவ்யாவையும் ரசிகர்கள் மறந்தே போய்விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அவ்வளவு பெரிய கேப் கொடுத்துவிட்டனர். 

இப்படி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த கூட்டணி ஒன்றாக இணைந்தால் நல்லா வருமா?? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் களம் இறங்குவதில் உறுதியாக இருக்கிறாராம் சுசீந்திரன். இதில் இருக்கும் ஒரே ஒரு ப்ளஸ் பயிண்ட் கும்கி படத்தில் நடித்த லட்சுமி மேனனும், விக்ரம் பிரபுவும் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்வது மட்டுமே. என்னதான் இருந்தாலும் தனது கதையில் பின்னி பெடலெடுக்கும் சுசீந்திரன், நடிப்பிற்கு பெயர் போன லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா, விக்ரம் பிரபுவை வைத்து வேற லெவலுக்கு மிரட்ட போகிறார் என்று ஒரு தரப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெயிட் அண்ட் சீ...மக்களே...!!
 

click me!