கேவலமாக விமர்சித்த ரஜினி ரசிகர்கள்... ட்விட்டரில் போட்டு கிழித்தெடுத்த தமிழ்நாடு வெதர்மேன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 23, 2020, 12:00 PM IST
Highlights

ரஜினி ரசிகர்களின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ப்ரதீப் ஜான் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வெளியிட்ட வீடியோவை ட்விட்டர் நிர்வாகம் டெலிட் நேற்று டெலிட் செய்தது.  “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது. அது மூன்றாம் நிலைக்குப் போய்விடக் கூடாது. வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்த முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்." என்று ரஜினி கூறியிருந்தார்.

இந்த தகவல் உண்மையானது அல்ல எனக்கூறி ரஜினி தங்களுடைய பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவை ட்விட்டர் நீக்கிவிட்டது. மற்றொரு ட்வீட்டில் தான் வீடியோவில் பேசிய தகவலை ஆங்கிலத்தில் ஒரு கடிதமாக வெளியிட்டு, அதனுடன் யூடியூப் தளத்தில் தான் பேசியதிற்கான லிங்க்கையும் ரஜினி கொடுத்திருந்தார். அந்த ட்வீட்டையும் நீக்கிவிட்டது ட்விட்டர் தளம். இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் ட்விட்டருக்கு எதிரான ஹேஷ்டேகுகளைக் பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ட்விட்டர் நிர்வாகத்தின் இந்த செயலை பாராட்டி தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் ட்வீட்டை ஒன்றை பதிவிட்டார். அதில், 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் அழிந்துவிடும் என்பது உண்மைக்கு மாறானது என்றும் உலகில் எங்குமே ஆய்வு ரீதியாக அது நிரூபிக்கப்படவில்லை என்றும், ரஜினியின் பதிவை நீக்கியதற்காக ட்விட்டர் நிறுவனத்துக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார். உடனடியாக பொங்கி எழுந்த ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு வெதர்மேனை கண்டபடி விமர்சிக்க ஆரம்பித்தனர். 

ரஜினி ரசிகர்களின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ப்ரதீப் ஜான் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் என்னை பற்றி அடுத்தடுத்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். "ஒரு தவறை, தவறு என பகிரங்கமாக சொன்னேன். அதற்காக, ரஜினி ரசிகர்கள் சிலர் என் மீது திமுக முத்திரையை குத்திவிட்டனர். மேலும் என மதத்தைச் சொல்லியும் அவதூறு செய்கின்றனர். சகிப்புத்தன்மை என்றால் என்பதை ரஜினி, தனது ரசிகர்களுக்கு முதலில் சொல்லித் தரட்டும்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

click me!