லாரியில் மோதி விபத்து... ஷங்கரின் உதவி இயக்குனர் சம்பவ இடத்திலேயே பலி !

By manimegalai a  |  First Published May 15, 2020, 1:34 PM IST

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த, அருண் பிரசாத் என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது, இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினரை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 


பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த, அருண் பிரசாத் என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது, இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினரை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில், கடந்த இரு மாதங்களுக்கு முன், இரவு படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது ராட்சத கிரேன் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில், ஷங்கரின் உதவி இயக்குனர் கிருஷ்ணா, உட்பட தயாரிப்பு உதவியாளர் மது, மற்றும் ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த சோகம், படக்குழுவினரின் நெஞ்சங்களை விட்டு நீங்குவதற்குள், ஷங்கரின் மற்றொரு துணை இயக்குனர், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்: பழப்பெறும் நடிகை எஸ். லலிதா உடல்நல குறைவு காரணமாக காலமானார்!
 

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த  இவர், மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் அதி வேகத்தில்பயணித்துக் கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது இவர் சென்று கொண்டிருந்த பைக் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த இவருடைய தலையில் பலமாக அடிபட்டு அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் சம்ப இடத்திலேயே  அருண் பிரசாத் உயிரிழந்தார்.

 

மேலும் செய்திகள்: ஊரடங்கில் சைலண்டாக காதலியை கரம் பிடித்த இளம் நடிகர்! குவியும் வாழ்த்து!
 

கொரோனா தொற்று  பிரச்சனை காரணமாக, அணைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டதால், தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற நேரத்தில் இந்த விபத்தில் இவர் சிக்கியுள்ளார் அருண் பிரசாத். இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

click me!