இரண்டு ஆண்களால் திசை மாறியதா என் வாழ்க்கை?... நடிகை சோனாவின் அதிரடி விளக்கம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 15, 2020, 12:02 PM IST
இரண்டு ஆண்களால் திசை மாறியதா என் வாழ்க்கை?... நடிகை சோனாவின் அதிரடி விளக்கம்...!

சுருக்கம்

இந்நிலையில் நடிகை சோனா முதலில் ஒருவரை 6 வருடம் காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் முறிந்த பிறகு, அடுத்த நபருடன் 7 ஆண்டுகள் உயிருக்கு உயிராக பழகியதாகவும் இருவருமே திருமணம் வரை வந்து கடைசி நிமிடத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகின. 

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என  பல மொழி படங்களில் 125க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சோனா. கடந்த இரண்டு வருடத்திற்கு முன், இனி கவர்ச்சியான வேடத்தில் நடிக்க போவதில்லை என தெரிவித்தார். இதை தொடர்ந்து, நல்ல கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் சோனா நடித்த பச்சமாங்கா படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதாப் போத்தன், சோனா ஆகியோர் நடித்திருந்தனர். அந்த டிரைலரில் நடிகை சோனா இருவருடன் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது சற்று பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் மிகவும் கவர்ச்சியாக சோனா நடித்துள்ளார் என்கிற பல்வேறு விமர்சனங்களும் பறந்தன. ஆனால் 2020ம் ஆண்டு சோனாவிற்கு நல்ல ஆண்டாகவே அமைந்தது சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

இந்நிலையில் நடிகை சோனா முதலில் ஒருவரை 6 வருடம் காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் முறிந்த பிறகு, அடுத்த நபருடன் 7 ஆண்டுகள் உயிருக்கு உயிராக பழகியதாகவும் இருவருமே திருமணம் வரை வந்து கடைசி நிமிடத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வெறுத்து போன சோனா திருமணம் செய்யும் முடிவையே கைவிட்டு விட்டதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்கு நிவேதா பெத்துராஜா இது?.... அப்பட்டமாக முன்னழகை காட்டி அட்ராசிட்டி...!

காட்டுத்தீ போல் பரவி வரும் இந்த செய்தியை நடிகை சோனா திட்டவட்டமாக மறுதுள்ளார். இவை அனைத்தும் முற்றிலும் பொய்யான தகவல்கள் என்று மறுத்துள்ள சோனா, இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ