பழப்பெறும் நடிகை எஸ். லலிதா உடல்நல குறைவு காரணமாக காலமானார்!

By manimegalai a  |  First Published May 15, 2020, 12:53 PM IST

இந்த வருடம் தென்னிந்திய திரையுலகம் மட்டும் இன்றி, ஹாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களுக்கே மிகப்பெரிய சோதனை காலமாக அமைந்துள்ளது. 
 


இந்த வருடம் தென்னிந்திய திரையுலகம் மட்டும் இன்றி, ஹாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களுக்கே மிகப்பெரிய சோதனை காலமாக அமைந்துள்ளது. 

இளம் நடிகர் சேது, பழம் பெரும் நடிகர் விசு என தொடர்ந்து எதிர்பாராத விதமாக நடிகர்கள் உயிரிழந்தனர். அதே போல் பாலிவுட் திரையுலகை சேர்ந்த, முன்னணி நடிகர் இர்பான் கான், மற்றும் ரிஷி கபூர் இழப்பு ஒட்டு மொத்த  திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10 மேற்பட்ட மூத்த ஹாலிவுட் பிரபலங்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பழம்பெரும் நடிகையும், நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமான, எஸ்.லலிதா என்பவர் சேலத்தில் உள்ள அவருடைய வீட்டில் மரணமடைந்தார். வயது மூப்பு காரணமாகவும், உடல்நல பிரச்னையாலும் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று மாலை 6: 30 மணியளவில் காலமானதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுட்டள்ளது. அவரது மறைவுக்கு தென்னிந்த நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
 

click me!