
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் அனைத்து வுஇதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று போஸ்ட் புரோடக்ஷன் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள விஜய் சேதுபதி படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: வமீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!
நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் இடம் பொருள் ஏவல் படம் முழுமையாக முடக்கப்பட்ட பிறகும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.2014ம் ஆண்டு படப்பிடிப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயாராக இருந்த இந்த திரைப்படம் இன்று வரை ரிலீஸ் செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!
2014ம் ஆண்டு இந்த படத்தை தயாரித்த லிங்குசாமி தயாரித்து இயக்கிய அஞ்சான் திரைப்படம் தோல்வி அடைந்தது. இதனால் கடும் பண நெருக்கடியால் இடம் பொருள் ஏவல் படத்திற்கான பணிகள் தள்ளிப்போனது. இயக்குநர் சீனு ராமசாமி மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தை எப்படியாவது வெளிக்கொண்டு வர வேண்டுமென முயன்று வந்தார். இந்நிலையில் பட ரிலீஸ் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பது உண்மை தான்... அம்மாவானதை உறுதி செய்தார் மைனா நந்தினி...!
“சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்.இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை,இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி #இடம்பொருள்ஏவல் வெளியீடு” என்று சினிமா எடுப்பதை சூதாட்டத்துடன் ஒப்பிட்டும், 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தனது படத்தை பிள்ளையாக பார்ப்பதாக நெகிழ்ச்சியாகவும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.