சீனு ராமசாமியின் 50-ஆவது பிறந்தநாளில்... எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Published : Oct 14, 2022, 09:41 PM IST
சீனு ராமசாமியின் 50-ஆவது பிறந்தநாளில்... எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

சுருக்கம்

இயக்குனர் சீனு ராமசாமியின் 50-ஆவது பிறந்த நாளில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அவருக்கு கடிதம் மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமாவில், மிகவும் எதார்த்தமான கதைகளை படமாக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. 'கூடல் நகர்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தன்னுடைய இரண்டாவது படமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்காக தேசிய விருதை பெற்றவர். 2007 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானத்தில் இருந்து 7 படங்களை மட்டுமே இயக்கியுள்ள இவர், தற்போது 'இடி முழக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

அதே போல் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான, 'மாமனிதன்' திரைப்படம், பல்வேறு விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று தன்னுடைய 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்,  ஸ்டாலின் இவருக்கு தன்னுடைய கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய கடிதத்தில் கூறியுள்ளதாவது...

"சமூக பொறுப்புணர்வு மிக்க, கவித்துவமான திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருக்கும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள், இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கும் வேளையில், தனது 50-வது வயதில் அடி எடுத்து வைத்திருப்பார். அவரது பொன் விழாவையொட்டி ஏற்கனவே அவர் எழுதி வெளிவந்த கவிதை தொகுப்புகளோடு புதிதாக எழுதிய கவிதைகளையும், இணைத்து சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை என்ற இந்த கவிதை தொகுப்பு ஆலிவ் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளி வருவதை அறிந்து மகிழ்கிறேன்.

'தென்மேற்கு பருவக்காற்று' என்ற தனது இரண்டாம் படைப்பிலேயே, தேசிய விருதை எட்டிப் பிடித்த இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் அத்தலைப்பிலேயே தனது கவிழ்த்துவத்தை காட்டியிருப்பார். திரைமொழியில் மட்டுமல்லாமல், தமிழ் மொழியிலேயும்அவருக்கு இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன. கிராம வாழ்விலும், நகர வாழ்விலும், நாள்தோறும் நாம் காணும் மிக சாதாரண காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஒரு தேர்ந்த இலக்கியவாதிக்கு உரிய தனது அவதானிப்புகளால் கவிதைகளாக்கி ஒரு காலப் பெட்டகத்தையே நமக்கு கையடித்திருக்கிறார் சீனு ராமசாமி அவர்கள்.

பொன்விழா காணும் அவர் மென்மேலும் பல அழகிய, மென்மையான படைப்புகளை வழங்குவதோடு பல கவிதை தொகுப்புகளையும் வழங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன். அன்புடன் ஸ்டாலின் என தன்னுடைய வாழ்த்துறையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சீனு ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... "எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து, எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர்.

இந்நூலுக்கு வாழ்த்துமடல், மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன்.

மேலும் அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.. கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார். உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே.. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அம்மா எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன் என் வாழ்நாளில் சிறப்பான நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள்.

நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன் அவர்கள் அதுவும் தீடீரென்று.. என் காதலுக்குரியவர் அவர் மோகன் சாருக்கு இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன். வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றி வணக்கம். என தெரிவித்துள்ளார்.,

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!