வாரிசு படத்தில் காத்திருக்கும் மாஸ்...கெத்துக்காட்டும் நடன இயக்குனர் ஜானி

By Kanmani P  |  First Published Oct 14, 2022, 7:22 PM IST

படத்தின் நடன இயக்குனர் ஜானி "விஜயின் அனல் பறக்கும் நடனத்தை காண தயாராகுங்கள் என பதிவிட்டுள்ளார். இவர் தான் முன்னதாக பீஸ்ட் படத்தின் நடனங்களை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நெல்சன் திலீப் குமாரின் வீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சியுடன் வாரிசு படத்தில் இணைந்துள்ளார். விஜய் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரகாஷ்ராஜ்,   பிரபு, சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த ஆக்சன் படமாக இது உருவாகும் என முன்னதாகவே இயக்குனர் அறிவித்திருந்தார். 

விஜயின் இந்த படத்திற்கு முதல்முறையாக தமன் இசையமைக்கிறார். பாடல்கள் குறித்து சுவாரசியங்களை முன்னதாக தமன் பேசுகையில் வாரிசு படத்தின் பாடல்களை கட்டாயம் ஹிட் ஆக்குவேன் என சூளுரைத்திருந்தார். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...ஆஜராகாமல் சூட்டிங்கிற்கு சென்ற அர்னவ்..அலேக்காக அள்ளிய போலீஸ்

வாரிசு படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது. படத்தில் முதல் சிங்கள் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது. வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் நடன இயக்குனர் ஜானி "விஜயின் அனல் பறக்கும் நடனத்தை காண தயாராகுங்கள் என பதிவிட்டுள்ளார். இவர் தான் முன்னதாக பீஸ்ட் படத்தின் நடனங்களை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு...இன்று வெளியாகும் சர்தார் ட்ரைலர்...கார்த்தியின் மாஸ் லுக்கில் வெளியான போஸ்டர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jani Master (@alwaysjani)

click me!