
'பொன்னியின் செல்வன்' மாஸ் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'சர்தார்'. அக்டோபர் 21 ஆம் தேதி, தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று மாலை 7 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்த படத்தின், ட்ரைலர் லான்ச் தற்போது நடந்து வரும் நிலையில்... இந்த படத்தின் ட்ரைலர் குறித்த நேரத்தில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அப்படி வெளியாமல் போனது கார்த்தியின் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இந்த படம் ஆக்சன் ஸ்பை தில்லைராக உருவாருகியுள்ள நிலையில், கார்த்தி தந்தை ,மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல கெட்டப்புகளில் வந்து ஆச்சர்யப்படுத்துவார் என்பது டீஸரிலேயே தெரிந்தது.
ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலாபோன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் 90'ஸ் கிட்சின் கனவு கன்னி லைலா... 16 வருடங்களுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.