இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023! இன்று அமோகமாக துவங்கியது!

By manimegalai a  |  First Published Apr 7, 2023, 2:44 PM IST

இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக முன்னெடுக்கும் விதமாக "வானம் கலைத்திருவிழா"  என்கிற புத்தக கண்காட்சியையும்,  பி கே ரோசி திரைப்பட திருவிழாவையும் துவங்கி வைத்துள்ளார்.
 


நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக முன்னெடுக்கும் விதமாக "வானம் கலைத்திருவிழா"  என்கிற பெயரில் சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தலித் வரலாற்று கண்காட்சியுடன் துவங்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து (07.04.2023) இன்று பி கே ரோசி திரைப்பட திருவிழா துவங்கியது.  சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் பறையிசை முழக்கத்துடன் இயக்குனர் பா.ரஞ்சித் இதனை துவங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக  தீபா தன்ராஜ், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, ஷான், தியாகராஜன் குமாரராஜா,துருஷாந் இங்லே ஆகிய இயக்குனர்கள் பங்குபெற்று சிறப்புரையாற்றினார்கள். 

Tap to resize

Latest Videos

undefined

மேலும் நிகழ்வை தொடங்கி வைத்த இயக்குனர் பா.ரஞ்சித்  "புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு  தலித் வரலாற்று மாதமாக வானம் கலைத் திருவிழாவை முன்னெடுத்து செல்கிறோம்.  கறுப்பின மக்களின் பண்பாட்டு எழுச்சியில் உருவான புரட்சியை மையமாக வைத்து பண்பாட்டு தளத்தில் பல செயல்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்" என்று சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைத்து விருந்தினர்களும் நிகழ்வை சிறப்பித்து கொடுத்தனர்.

August 16 1947 Review: கௌதம் கார்த்திக் நடித்த 'ஆகஸ்ட் 16, 1947' திரைப்பட எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!

திரைப்பட திருவிழாவின் முதல் நாளான இன்றை தொடர்ந்து 8.04.2023 நாளை மற்றும் 9.04.2023 நாளை மறுநாளும் பல திரைப்படங்களின் திரையிடல்களும் நடைபெறவிருக்கிறது. மேலும் வருகிற நாட்களில் வானம் கலைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, இசை நிகழ்ச்சி கோயம்பத்தூரிலும், புகைப்பட கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, இலக்கிய கூடுகை, அரசியல் கூடுகை  சென்னையில் வெவ்வேறு இடங்களில் இம்மாதம் முழுக்க நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் ஒருபுறம் திரைப்பட வேளைகளில் பிசியாக இயக்கி கொண்டிருந்தாலும்... மற்றொரு புறம் இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி , நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை தொடர்ந்து, தன்னுடைய நீலம் புரோடக்ஷன் மூலம், அடுத்ததாக ஆர்யாவை கதாநாயகனாக வைத்து, சார்பட்டா 2 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜாவோடு வெளிநாட்டில் வெறித்தனமான பர்ஃபாமென்ஸ்! இசை நிகழ்ச்சியில்... கிக் ஏற்றும் ஆண்ட்ரியா!

click me!