Parking Movie: ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' படம் எப்படி இருக்கு? நெல்சன் திலீப் குமாரின் விமர்சனம்!

By manimegalai aFirst Published Nov 30, 2023, 1:48 PM IST
Highlights

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்த்த பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் படம் குறித்த தன்னுடைய விமர்சனத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

பிக் பாஸ் பிரபலமும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'எல் ஜி எம்'. பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தயாரிப்பில் வெளியான இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில்... கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், எம்எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அன்பான மனைவி, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என வாழும் நாயகன் கார் ஒன்றை வாங்க, அந்த காரை எங்கு நிறுத்துவது என வீட்டு ஓனருக்கும் - டெனெடுக்கும் இடையே நடக்கும் ஒரு பொதுவான பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கதாநாயகன் வாழ்க்கையில் எப்படி பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இப்படம்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் குழந்தை இந்த முன்னணி ஹீரோயினா..! யார் தெரியுமா?

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க,  ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். நாளை வெளியாக உள்ள இந்த படத்தை, பார்த்த இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இப்படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது "பார்க்கிங் திரைப்படம் மிகவும் அருமை. எம் எஸ் பாஸ்கர், ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜாவின் நடிப்பு அற்புதம். தன்னுடைய முதல் படத்திலேயே இயக்குனர் ராம்குமார் நல்ல படைப்பை கொடுத்துள்ளார். பட குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்கள். இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியை பெரும் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
 

movie is superb… sir and performed so well… commendable debut by 👏👏 all the best for the fantastic run at the box office 🤗 👍

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar)

 

click me!