எனக்கு 1 கோடி நஷ்டம்.. கிளம்பிய புதிய சர்ச்சை - ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம் மீது பாயும் இயக்குனர் அமீர்!

Ansgar R |  
Published : Nov 30, 2023, 12:06 PM IST
எனக்கு 1 கோடி நஷ்டம்.. கிளம்பிய புதிய சர்ச்சை - ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம் மீது பாயும் இயக்குனர் அமீர்!

சுருக்கம்

Director Ameer About Dream Warrior Production : கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் பருத்திவீரன். இந்த திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமான நடிகர் தான் கார்த்தி.

அண்மையில் பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பு சம்பந்தமாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா சில தகவல்களை வெளியிட்டு இருந்தார். அதில் பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குனர் அமீர் அவர்களை கடுமையாக சாடி அவர் பல விஷயங்களை பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஒரு சிலர் ஞானவேல் ராஜாவிற்கு ஆதரவாக பேச, சமுத்திரக்கனி, இயக்குனர் சுதா கொங்கரா, சசிகுமார் உள்ளிட்ட பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அந்த பதிவில் அவர் கூறியது பின்வருமாறு..

இது காரா இல்ல மினி ஏரோபிளைனா.. நயன்தாரா வாங்கி இருக்கும் 'Mercedes Maybach' காரில் இத்தனை வசதிகள் இருக்கா! 

"பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது, நான் இது நாள் வரை அதைப்பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணன்" என்று தான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த பிரச்சனை அத்தோடு முடிந்தது என்றே கூறலாம், இந்த சூழ்நிலையில் இயக்குனர் அமீர் ஒரு புதிய சர்ச்சையை தற்பொழுது வெளிப்படுத்தி உள்ளார். பிரபல நடிகரும், இயக்குனருமான சித்ரா லக்ஷ்மணன் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குனர் அமீர் "அச்சமில்லை அச்சமில்லை" என்ற திரைப்படம் குறித்து பேசி உள்ளார். 

சில வருடங்களுக்கு முன்பு "அச்சமில்லை அச்சமில்லை" என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை தானும் தனது உதவியாளரும் இணைந்து தயாரிக்க முடிவு செய்து அதற்கான தணிக்கை சான்றிதழ் வரை பெற்றதாகவும். அந்த படத்திற்கான ஆடியோ லான்ச் கூட நடந்து முடிந்தது என்றும் அவர் கூறினார். அந்த சூழ்நிலையில் சூர்யா, கார்த்தி குடும்பத்தை சேர்ந்த ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அந்த திரைப்படத்தை தாங்கள் வெளியிடுவதாக கூறி அதன் உரிமத்தை வாங்கியதாகவும் கூறினார். 

Never.. Ever.. Give Up.. வெறும் வார்த்தையாக அல்ல.. விடாமுயற்சியால் வென்ற பிரபலங்கள் - வெற்றி பட்டியல் இதோ!

ஆனால் இன்றளவும் அந்த படத்தை வெளியிடாமல் வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் படத்திற்காக அவரும், ஆவது உதவியாளரும் இணைந்து தயாரித்த மொத்த பணமும் வீணாகிவிட்டது என்றும். என்னுடைய உதவியாளர் கோபால் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்தால் தனக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது, இதை நான் இதுவரை எந்த பொதுவெளியிலும் கூறவில்லை என்று ஒரு பகிர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தனியாக திரைப்பட தயாரிப்பை துவங்கும் முன்பு, Dream Warrior Pictures நிறுவனத்தின் பிரகாஷ் மாற்று பிரபு ஆகிய இருவரும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் உறவினர்கள் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!