தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல்நிலை குறித்து முக்கிய தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டதன் காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று காலை மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரமாக விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தது. விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு என செய்தி வெளியானது ரசிகர்கள் பதறிப்போயினர். அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனையும் செய்து வந்தனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம், விரைவில் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என கூறினார். அவர் வெளியிட்ட இந்த வீடியோ விஜயகாந்தின் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கு நம்பிக்கையுட்டும் வகையில் அமைந்தது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பேசினார். அதுபற்றி அவர் கூறியதாவது : “விஜயகாந்த் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம். அவர் நலா இருக்காரு. அவரது உடல்நிலை சீராக உள்ளது. இந்த பருவமழை காலத்தில் இருமல் தான் அவருக்கும் உள்ளது. அது 15, 20 நாட்களாக உள்ளது. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து கொண்டு தான் இருக்கிறார்கள்” என கூறினார்.
இதையும் படியுங்கள்... Breaking: விஜயகாந்த் எப்படி இருக்கிறார்..? பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ..!