Breaking: விஜயகாந்த் எப்படி இருக்கிறார்..? பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ..!

By manimegalai a  |  First Published Nov 29, 2023, 9:54 PM IST

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், குறித்து இன்று காலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளார்.
 


கேப்டன் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சளி மற்றும் இருமல் காரணமாக மியாட்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மூச்சு திணறல் காரணமாக, ICU  சில நாள் சிகிச்சை பெற்ற அவர் மீண்டும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Tap to resize

Latest Videos

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவ்வப்போது, விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில்... இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கை, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையில்.. "திரு விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறப்பட்டது".

Vishal: இதுக்கு ஸ்ரீரெட்டியை தடவி இருப்பேன்! ச்சீ ச்சீ.. பலர் முன்பு கொச்சையாக பேசிய விஷால்! குவியும் கண்டனம்

இதை தொடர்ந்து சற்றுமுன்னர்... பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில்... "தேமுதிக சொந்தங்களுக்கும், கேப்டன் மீது அளவு கடந்த பற்று வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை, வழக்கமான அறிக்கை தானே தவிர, பதட்டம் அடையவோ... பயபுடவோ ஒன்றும் இல்லை. கேப்டன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். நானும் அவருடன் தான் இருக்கிறேன். விரைவில் கேப்டன் அவர்கள் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்புவார். அனைவரது பிரார்த்தனை மற்றும் அவர் செய்த தர்மம் அவரை காப்பாற்றும். வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Captain Health update: 🤝

pic.twitter.com/DJ8UHq9ymi

— Christopher Kanagaraj (@Chrissuccess)

 

click me!