
சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான அஞ்சாதே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றிகண்ட இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் உயர்ந்தார்.
இதையும் படியுங்கள்... முன்னாள் சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்த மாதவன்..உச்சம் தொடும் 'ராக்கெட்ரி : : தி நம்பி எஃபெக்ட்!
இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Poo Ramu Death : மிகச்சிறந்த நடிகர்... என்னுடன் தான் கடைசியாக நடித்தார்- பூ ராமு மறைவால் கலங்கிய சூப்பர்ஸ்டார்
இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் டெவில் என்கிற படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குனர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கி உள்ளார். இவ்ர் ஏற்கனவே சவரக்கத்தி என்கிற படத்தை இயக்கியுள்ளார், டெவில் அவர் இயக்கும் இரண்டாவது படமாகும்.
இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் கேரக்டர்... லோகேஷின் முதல் சாய்ஸ் சூர்யா இல்ல.. இவர்தானாம் - வெளியானது விக்ரம் பட சீக்ரெட்
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எஸ். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் வித்தார்த் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பூர்ணாவும் நடித்துள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் மிஷ்கின் இதுவரை 4 பாடல்களுக்கு இசையமைத்துள்ளாராம். விரைவில் பாடல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.