Vattam : கமலக்கண்ணன் இயக்கியுள்ள வட்டம் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஸ்டுடண்ட் நம்பர் ஒன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளியான நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் பிரபலமானார்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் உதயநிதி ராஜ்ஜியம்... பெரிய படங்கள் ரெட் ஜெயண்டை நாடுவதன் பின்னணியின் இப்படி ஒரு விஷயம் இருக்கா..!
இதையடுத்து ஜாக்சன்துரை, சத்யா, வால்டர், கபடதாரி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் சிபிராஜ். இவர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான மாயோன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்திற்கான திரையரங்க எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் விஜய்... அஜித் லிஸ்ட்லயே இல்ல
இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதன்படி வட்டம் என்கிற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் சிபிராஜ். கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகைகள் அதுல்யா, ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ‘இரவின் நிழல்’ படத்துக்கு தனுஷ் செய்த உதவியால் நெகிழ்ந்துபோன பார்த்திபன் - வைரலாகும் டுவிட்டர் பதிவு
கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார். வட்டம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, அத்துடன் ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஜுலை மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.