விஷால்... உன் ஜம்பம் என்னன்னு தெரிஞ்சு போச்சு... முதல்ல உன்ன நீ காப்பாத்திக்க, பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம்...பொங்கிய இயக்குனர்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2019, 11:49 AM IST
Highlights

தேர்ந்தெடுத்த அமைப்புகள் கையால் ஆகாமல் காணாமல் போய்விட்டது.  இப்போது இருக்கும் ஆலோசனைக்குழு ஏன் வாழாவிற்கிறது.  என்னுடைய,  மனுசனா நீ திரைப்படத்தை திருடிய கிருஷ்ணகிரி கிருஷ்ணா தியேட்டர் (உரிமையாளர்) திருடன் கைது செய்யப்பட்டு இப்போது வரை கேஸ் நடக்கிறது நல்லதே நடக்கிறதா நம்பிக் கொண்டிருக்கிறேன்.  தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் ஆலோசனை குழுவிடம் நான் இதுவரை தியேட்டர் பைரசிக்காக எடுத்த நடவடிக்கைகளில் தொகுப்பை 26 அட்டாச்மென்ட்களோடு சுமக்க முடியாத வெயிட்டோடு பெரிய பையில் இட்டு கடிதம் கொடுத்தேன்,  மூன்று மாதங்களை தாண்டிவிட்டது.   இலவம்பஞ்சு மரத்திற்கடியில் கிளி போல் உட்கார்ந்திருக்கிறேன்.

கோடி கோடியாக செலவு செய்து திரைப்படம்  எடுத்தாலும் கடைசியில்  பூனையை காவல் வைத்த கருவாடாய் மாறி வருகிறது.  படம் வெளிவந்த அடுத்த நொடி இணையதளத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியாகிவிடுகிறது.  இதை கட்டுப்படுத்த எத்தனையோ,  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும்  பைரஸி பிரச்சினையை மட்டும் தடுக்கவே முடியவில்லை.  நடிகர் தேர்தலில்  போட்டியிட்ட விஷால் வீடியோ பைரசியை ஒழித்தே தீருவேன் என சபதமேற்று பல அதிரடி ஆக்சன்களில் ஈடுபட்டார்.  ஆனாலும் அதில் பெரிய அளவில் பலன் இல்லை. காரணம் தற்போது அவர் நடித்துள்ள ஆக்சன் திரைப்படமே இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

முன்னதாக இயக்குனர்  கசாலி இயக்கத்தில் வெளியான மனுஷனா நீ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் அத்திரைப்படம் இணையதளத்தில் வெளியானது.  அது அப்படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  இதுதொடர்பாக கசாலி அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்கில் அவரது படம் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது தொடர்பாக,  ஆப்பரேட்டர், மற்றும்  திரையரங்கு உரிமையாளரை,  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  ஆனாலும் பைரசி பிரச்சனையை தீர்ந்தபாடில்லை.  இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள  கசாலி தமிழ் மகன்,   மூவிஸ்தாஸ்,  தமிழ் மாஸ்டர்,  என்று இன்னும் என்னென்னவோ தமிழ்ப் பெயர்களில் திருட்டு கும்பல் நம் தமிழ் படங்கள் வெளிவந்த அன்றே சுடச்சுட தியேட்டர்களில் திருடி நெட்டில் ஏற்றுகின்றனர்.  தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் நடித்ததும்   அதே சங்கத்தில் மிக அதிகப்படியாக ஒட்டு வாங்கி,  செயற்குழு உறுப்பினராக ஜெயித்தவர் இயக்கிய ஆக்சன் திரைப்படம் இன்றே தியேட்டர்களில் திருடப்பட்டு வெளிவந்துவிட்டது நன்றாக தெரிகிறது. 

நம் தமிழ்நாட்டு தியேட்டரில் இருந்து தான் திருடப்படுகின்றன,  முன்பு வரை அதாவது எட்டு மாதங்களுக்கு முன்பு வரை கியூப் நிறுவனத்திடம் திருட்டு பிரிண்டர் மொத்தம் ரூபாய் 59 ஆயிரம் கொடுத்தால்,  எந்த தியேட்டரில் இருந்து திருடப்பட்டது என்று சொல்யூஷன்  அனாலிசிஸ் செய்து ரிப்போர்ட் கொடுப்பார்கள் ஆனால் கடந்த 8 மாதங்களாக திருட்டு  பிரின்ட்டையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு எங்கள் ப்ரொஜெக்டர்கள் இருக்கும் எந்த தியேட்டரில் இருந்தோம் திருடமுடியாது,  என்று சொல்லிவிடுகிறார்கள்.  அதற்கு சித்திரம் பேசுதடி- 2  முதற்கொண்டு பல படங்கள் உதாரணம் சொல்லலாம்  இவர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவர்களை காப்பாற்றுகிறார்கள் விளங்கவா செய்யும் நம் தொழில்.  நாசமாய் போய்விடும் நம் தமிழ் திரைப்பட தயாரிப்பு.  இதை சிலமுறை வாய்மொழி புகாராகவும் கொடுத்தாகிவிட்டது ஏன் என்று  கேட்கத்தான்யாரும் இல்லை... 

தேர்ந்தெடுத்த அமைப்புகள் கையால் ஆகாமல் காணாமல் போய்விட்டது.  இப்போது இருக்கும் ஆலோசனைக்குழு ஏன் வாழாவிற்கிறது.  என்னுடைய,  மனுசனா நீ திரைப்படத்தை திருடிய கிருஷ்ணகிரி கிருஷ்ணா தியேட்டர் (உரிமையாளர்) திருடன் கைது செய்யப்பட்டு இப்போது வரை கேஸ் நடக்கிறது நல்லதே நடக்கிறதா நம்பிக் கொண்டிருக்கிறேன்.  தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் ஆலோசனை குழுவிடம் நான் இதுவரை தியேட்டர் பைரசிக்காக எடுத்த நடவடிக்கைகளில் தொகுப்பை 26 அட்டாச்மென்ட்களோடு சுமக்க முடியாத வெயிட்டோடு பெரிய பையில் இட்டு கடிதம் கொடுத்தேன்,  மூன்று மாதங்களை தாண்டிவிட்டது.   இலவம்பஞ்சு மரத்திற்கடியில் கிளி போல் உட்கார்ந்திருக்கிறேன்.  பார்ப்போம் என்ன ஆனாலும் சரி என் படத்தை திருடியவனை  நான் விடுவதாக இல்லை.  இன்று ஆக்ஷன்,  நாளை சங்கத்தமிழன், இது ஒரு தொடர்கதை கண்முன்னே திருட்டுப்பயலை வைத்துக்கொண்டு வாரவாரம் பைரசி பற்றி பேசுகிறோம். காத்திருக்கிறேன் ஒரு நாள் விடியாமல் போகாது என்று. அவர் பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

click me!