சேட்டன்களை அடித்து தூக்கிய 'பிகில்'... கேரளாவில் வசூலை வாரிக்குவித்து அதிரடி...!

Published : Nov 17, 2019, 08:31 AM IST
சேட்டன்களை அடித்து தூக்கிய 'பிகில்'... கேரளாவில் வசூலை வாரிக்குவித்து அதிரடி...!

சுருக்கம்

தற்போது பிகில் திரைப்படம் கேரள சேட்டன்களின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளிக்கு என்றும் நம்பர்  ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. 

விஜய்யின் படங்களுக்கு கேரளாவில் எப்போதும் மவுசு அதிகம். அதனால் தான் கேரளா தளபதியின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. அட்லீ - விஜய் கூட்டணியில் தீபாவளி ட்ரீட்டாக வெளிவந்த பிகில் திரைப்படம், கேரளாவிலும் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. பிகில்' திரைப்படத்தில் வரும் ராயப்பன் விஜய்க்கு சிலை வைத்து தெறிக்கவிட்டனர் கேரள ரசிகர்கள். 

முதலில் 'பிகில்' படத்தை வாங்க கேரள விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்ற தகவல் வெளியான நிலையில், நடிகர் பிருத்விராஜ் 'பிகில்' படத்தை வாங்கி, கேரளாவில் திரையிட்டார். தமிழகத்தைப் போல, கேரளாவிலும் வசூல் வேட்டையாடிய பிகில் திரைப்படம், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

அதிக எதிர்பார்ப்பு மற்றும் பிரம்மாண்ட வரவேற்புடன் கேரளாவில் வெளியிடப்பட்ட 'பிகில்', அங்கு ஒரே நாளில் ரூ.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது பிகில் திரைப்படம் கேரள சேட்டன்களின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளிக்கு என்றும் நம்பர்  ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. 4வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகில் திரைப்படம் கேரளாவில் இதுவரை ரூ.20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஐ, மெர்சல், தெறி, 2.O, கபாலி ஆகிய படங்களைக் கூட அடுத்த இடத்திற்கு தள்ளி, முதலிடத்தில் பிகில் பட்டா போட்டு அமர்ந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனி - சக்தியை ஜோடியாக சிறைபிடித்தாரா தேவசகாயம்? எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
தினேஷின் கதையை முடித்த ரோகிணி... மனோஜை டார்ச்சர் பண்ணிய தங்கச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்