எடையை குறைத்து நச்சுன்னு மாறிய நமீதா... அடுத்து என்ன பண்ணாங்க தெரியுமா?... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் புகைப்படங்கள்...!

Published : Nov 17, 2019, 08:24 AM IST
எடையை குறைத்து நச்சுன்னு மாறிய நமீதா... அடுத்து என்ன பண்ணாங்க தெரியுமா?... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் புகைப்படங்கள்...!

சுருக்கம்

தற்போது சிவப்பு நிற உடையில் நமீதா கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக "எங்கள் அண்ணா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் திடீரென ஓவர் வெயிட் போட்ட நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. 

படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இதனால் நமீதாவின் ரசிகர்கள் செம்ம குஷியாகினர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நமீதா. அதனைத் தொடந்து, கடந்து ஆண்டு வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை கைவிட்டிருந்த நமீதா, தற்போது மீண்டும் திரையில் தோன்றும் எண்ணத்தில் உள்ளார்.

இதற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ள நமீதா, ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். தற்போது சிவப்பு நிற உடையில் நமீதா கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. இந்த கவர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற தொனியில் நமீதா கொடுத்துள்ள போஸ் இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?