
இந்த மாதிரியான நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் அவர் நடிப்பது இதுதான் முதல்முறை.'சைக்கோ' படத்தில் அதிதி ராவ் ஹைதேரி, நித்யா மேனன் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராம், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அங்குலிமாலா பற்றிய புகழ்பெற்ற புத்தமத கதையை தழுவி 'சைக்கோ' படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே இந்தப் படத்தி்ன் மிரட்டலான டீசர் வெளியாகி, ரசிகர்களை மிரளச் செய்தது. இதனைத் தொடர்ந்து, 'சைக்கோ' படக்குழுவிடமிருந்து மற்றொரு சர்ப்ரைசான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சைக்கோவுக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் 'உன்ன நினச்சு' பாடல் முதல் சிங்கிள் ட்ராக்காக வரும் நவம்பர் 18ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இளையராஜா - மிஷ்கின் - உதயநிதி கூட்டணி அமைத்திருக்கும் படம் என்பதால், 'சைக்கோ' படத்தின் இ்சை மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக, படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'சைக்கோ' படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.