
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுக்க பல்வேறு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் கைது செய்யபட்டவர் இயக்குனர் கௌதமன்.
மேலும் சமீப காலமாக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதில் 32 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக சமீபத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று போராட்டாம் நடத்திய அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் போராடுவேன் என சொல்லியிருந்த அவர் தற்போது மீண்டும் சென்னை, கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் இன்று காலை போராட்டம் நடத்தினார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்கு வரத்து நெரிசலும் அதிகரித்தது. போராட்டத்தை கைவிட மறுத்தநிலையில் அவரையும், இளைஞர்களையும் காவல் துறை கைது செய்தனர்.
தற்போது போது இடத்தில், போது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.