
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்தது தான். அவர் இறந்த தேதி எது? எப்படி இறந்தார் என தற்போது வரை பலர் தங்களுடைய சந்தேகங்களை முன்வைத்து வருகின்றனர்.
மறைந்த முதலமைச்சரின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டு பிடிப்பது அரசியல் பிரச்சனையாகவும் தற்போது உருவெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த நிலையில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5ஆம் தேதிக்கு முந்திய நாளான டிசம்பர் 4ஆம் தேதியே தன்னிடம் படப்பிடிப்பை கேன்சல் செய்யுமாறு அதிமுக அமைச்சர் ஒருவரின் மைத்துனர் கூறியதாக பிரபல நடிகர், இயக்குனர் மனோபாலா தற்போது கூறியுள்ளார்.
இதனால் சிறிது நாட்கள் அமைதியாக இருந்த இந்த விஷயம் தற்போது கொளுந்து விட்டு எரிய ஆரமித்துள்ளது.
இது குறித்து மனோபாலா கூறியதாவது... நான் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா அம்மாவைப் பார்க்க மருத்துவமனை சென்றேன். அங்கு சிறு பரபரப்பு காணப்படது.
லிப்டில் ஏறி மேல் தளத்திற்கு சென்று பார்த்தால் அத்தனை எம்.எல்.ஏக்களும் இருந்தனர். ஒரே மௌன களமாக இருந்தது. ஒரு அமைச்சரின் மைத்துனர் வேகமாக என்னிடம் வந்து அண்ணா ஷூட்டிங் இருந்தால் உடனே கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்கு போங்க என்று கூறினார்.
ஏதோ நடக்கப்போகிறது என நினைத்து நானும் உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்தேன். மறுநாள் வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. நான் ஏன் கேன்சல் செய்தேன் என இதுவரைக்கும் புரியவில்லை’ என்று கூறினார்.
ஆனால் அவர் கூறிய மறுநாள்... இரவு அம்மா இறந்ததாக அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தான் தனக்கும் தோன்றுகிறது என்பது போல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுத்து வரும் நிலையில் மனோபாலாவின் இந்த பேட்டி அதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.