இத்தனை கோடிக்கு ஒர்த் இல்லை... கீர்த்தியை கழட்டிவிடும் இயக்குனர்கள்...

 
Published : Apr 13, 2017, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
இத்தனை கோடிக்கு ஒர்த் இல்லை... கீர்த்தியை கழட்டிவிடும் இயக்குனர்கள்...

சுருக்கம்

directors reject keerthi suresh

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து மெகா ஹிட் ஆன,'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய இரண்டு வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து விட்டு, விஜய், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் இவர் தனுஷ் மற்றும் விஜயுடன் நடித்த இரண்டு படங்களுமே தோல்வியை தான் தழுவியது, தற்போது இவர் தமிழில் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கி வரும் 'மகாநதி' படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு பலர் சாவித்திரி வேடத்திற்கு இவர் செட் ஆக மாட்டார் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த, 'பாம்பு சட்டை' படம் நல்ல கதை மட்டும் அவருடைய நடிப்புக்கும்  நல்ல வரவேற்பு இருந்த போதிலும் எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் ஒரு கோடியாய் இருந்த தன்னுடைய சம்பளத்தை இப்போது இரண்டு கோடியாய் உயர்த்தியுள்ளாராம், மேலும் தற்போது தெலுங்கில் இவர் நடித்து வரும் பவன் கல்யாண் படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். 

மேலும் தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் அனைத்து இயக்குனர்களும் 2 கோடி சம்பளத்திற்கு ஒத்து கொண்டால் தான் கதையை கேட்கின்றாராம், இதனால் பலர் 2 கோடி கொடுத்து நடிக்க வைக்கும் அளவிற்கு இது ஒர்த் இல்லை என்று வந்தவழியாகவே திரும்பி சென்று விடுகிறார்கள் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!