சிக்கலில் ஹன்சிகாவின் படம்... ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரி வழக்கு..!

By manimegalai aFirst Published May 14, 2021, 3:27 PM IST
Highlights

நடிகர் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள 'மகா' படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை கோரி, இயக்குனர்  வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நடிகர் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள 'மகா' படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை கோரி, இயக்குனர்  வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புசு புசு என்று இருந்த போது , கையில் பல பட வாய்ப்புகளுடன் சுற்றி வந்த  நடிகை ஹன்சிகாவின், செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியதும் அவரது கை வசம் உள்ள ஒரே படம் என்றால், கதாநாயகியை மையமாக வைத்து ஈடுபட்டுள்ள 'மகா' திரைப்படம் தான். தற்போது இந்த படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை கோரி, அப்படத்தின் இயக்குனர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு,  பதிலளிக்கும்படி, பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதல் ப்ரேக்கப்பிற்கு பிறகு நடிகர் சிம்புவுடன் இணைந்துள்ளார் நடிகை ஹன்சிகா.  இந்த படத்தை  எக்ஸெட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ளார். தற்போது கொரோனா அலை மீண்டும் தலை தூக்கி உள்ளதால், பல முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் ஹன்சிகாவின் 'மகா' படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம், தனக்கு தெரியாமலேயே ஏற்பாடு செய்து வருவதாக கூறி, படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரியும் இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இயக்குனர் ஜமீல் தனது மனுவில், கதைப்படி விமான பணிப்பெண்ணாக இருக்கும் கதாநாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறார். அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை என்றும், இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமல் தனது உதவி இயக்குனரை வைத்து படமாக்கியுள்ளதாகவும், தனக்கு தெரியாமல் படத்தை எடிட் செய்து, பின்னணி குரல் பதிவு செய்து படத்த வெளியிட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். அதே போல் தனக்கே தெரியாமல் தன்னுடைய படத்தை வேறு ஒருவரை வைத்து இயக்கியுள்ளதற்கு தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு தொகை கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இந்த இன்று விசாரணைக்கு வந்த பொது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  கிருஷ்ணன் ராமசாமி, இயக்குனர் ஜமீல் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மே 19ம் தேதிக்குள் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளார். நடிகை ஹன்சிகாவின் படத்திற்கு திடீர் என சிக்கல் வந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!