
பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர்களை விட அதில் குற்றம் கண்டு பிடித்துப் பேர் வாங்கும் புலவர்கள் அதிக பிரபலமாக இருப்பார்கள் என்கிற சொல்லுக்கு ஏற்ப, யூ டிபில் திரைப்படங்களை தனது அதிரடி விமர்சனங்களால் கிழித்துத் தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் அவதாரம் எடுத்து. 'ஆன்டி இண்டியன்' என்கிற படத்தையும் முடித்துள்ளார்.பல முன்னணி நடிகர்கள் படத்தை கிழித்து தொங்க விட்ட, இவரது படத்துக்காக பலர் வெயிட்டிங்’.
அப்படி என்ன புதுமையான கதையை எடுப்பார் என்கிற எதிர்பெற் இதற்க்கு காரணம். திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரான மாறன் யூடுபில் விமர்சகராக ஆனதற்கு முன்பு தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்தவர், அதிலும் குறிப்பாக நடிகர் விஜய்யின் படங்களில் அதிகம் பணியாற்றியவர் என்கிற சரித்திரம் பலருக்குத் தெரியாது. அடுத்து யூடுயூப் விமர்சகராக மாறிய அவர் ஈவுஇரக்கமின்றி படங்களை விமர்சித்ததால் அதிகம் தேடப்பட்டவரானார். குறிப்பாக அஜீத், விஜய், ரஜினி, சூர்யா படங்கள் சொதப்பலாக இருக்கும் மாறனின் விமர்சனத்தில் அனல் பறக்கும். அந்த விமர்சனத்துக்குக் கீழே கெட்ட வார்த்தை கமெண்டுகள் கொட்டிக்கிடக்கும்.
இந்நிலையில் தற்போது அவதாரம் எடுத்துள்ள, புலே சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. உண்மையில் யாரும் எதிர்பாராத அளவிற்கு போஸ்டர் வந்துள்ளது. ஒரு பிணத்தை தூக்கி வருவது போலவும், அதில் ஜாதி மத பேதம் இன்றி, இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் ஆகியோர் கலந்து கொடுள்ளனர். மேலும் ப்ளூ சட்டை மாறனின் கண்ணீர் அஞ்சலி ஒட்டப்பட்ட போஸ்டர்களும் காட்டப்படுகிறது. சவப்பெட்டியில் , எம்மதமும் சம்மதம் என்பது போல், 3 மதத்தை குறிக்கும் சின்னங்களும் உள்ளது . அதே நேரத்தில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல், சவப்பெட்டி மேல்... காவி துண்டு போட்ட குரங்கு நடுவிலும், அதன் அருகே இரண்டு கொடி பிடித்த குரங்குகளும் உள்ளது.
இந்த ‘படத்தில் நரேன், ராதாரவி, ‘வழக்கு எண்’முத்துராமன் தவிர்த்து மீதி அனைவரும் புதுமுகங்களே நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே புதுமுகங்கள்தான். மோஷன் போஸ்டர் வேற லெவலில் உள்ள நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.