கொரோனா நிவாரணத்திற்கு 'தல' அஜித் 2 .5 கோடி நிதி உதவி..! குவியும் பாராட்டு..!

Published : May 14, 2021, 10:43 AM ISTUpdated : May 14, 2021, 10:48 AM IST
கொரோனா நிவாரணத்திற்கு 'தல' அஜித் 2 .5 கோடி நிதி உதவி..! குவியும் பாராட்டு..!

சுருக்கம்

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நிவாரண நிதியாக பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில்  பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் பிள்ளைகளும், நடிகர்களுமான சூர்யா - கார்த்தி இருவரும், சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கிய நிலையில், அவர்களை தொடர்ந்து தல அஜித் 2 . 5 கோடி நிதி வழங்கியுள்ளார்.  

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நிவாரண நிதியாக பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில்  பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் பிள்ளைகளும், நடிகர்களுமான சூர்யா - கார்த்தி இருவரும், சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கிய நிலையில், அவர்களை தொடர்ந்து தல அஜித் 2 . 5 கோடி நிதி வழங்கியுள்ளார்.

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள திமுக கட்சி, தற்போது நிலவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் போதிய அளவில் தடுப்பூசி இல்லை என்கிற தகவலும் வெளியாகி வருகிறது.

அதே நேரத்தில் கொரோனாவால் தமிழகம் மற்றும் புதுவையில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது.   முதல் அலையை விட, இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, மே 10 ஆம் தேதி முதல், மே 24 ஆம் தேதி வரை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்து உபகரணங்களை வாங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

இவரது கோரிக்கையை ஏற்று பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில்... கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நடிகர் சிவகுமாரின் வாரிசுகள், கொரோனா பணிக்காக முதல் ஆளாக வந்து உதவினார்கள்.  முதலமைச்சரை நேரில் சந்தித்து, ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இவர்களை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜித், ரூ.2 . 5 கோடி முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலம், நேரடியாக முதல்வர் நிவாரண நிதிக்கு அஜித் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் போதிய மருத்துவ உபகாரணங்களுக்காக, அடுத்தடுத்து பல பிரபலங்கள் உதவி செய்ய முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!