விஜய் வந்தா நான் ஏன் எழுந்து நிற்கணும்; பல வருட சர்ச்சைக்கு பாலா அளித்த பளீச் பதில்

Published : Dec 29, 2024, 08:37 AM IST
விஜய் வந்தா நான் ஏன் எழுந்து நிற்கணும்; பல வருட சர்ச்சைக்கு பாலா அளித்த பளீச் பதில்

சுருக்கம்

வணங்கான் படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் விருது விழாவில் விஜய்யை அவமதித்ததாக எழுந்த சர்ச்சை பற்றி இயக்குனர் பாலா பேசி உள்ளார்.

தமிழ் திரையுலகில் தனித்துவமான படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் என்றால் அது பாலா தான். அவர் இயக்கிய வணங்கான் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. அப்படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். வணங்கான் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பல வருடங்களுக்கு பின்னர் வணங்கான் பட புரமோஷனுக்காக இயக்குனர் பாலா பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில், விஜய்யை தான் அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக விருது விழா ஒன்றில் விஜய் வரும் போது அனைவரும் எழுந்து நின்று வரவேற்பார்கள், ஆனால் பாலா மட்டும் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பார். அது விஜய்யை அவமதிப்பதற்காக அவர் செய்த செயல் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்... சூர்யா முன்னாடி நான் சிகரெட் பிடிக்கவே மாட்டேன் – இயக்குநர் பாலா!

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வாக இருந்தாலும் அதுபற்றி இயக்குனர் பாலா எந்த ஒரு மேடையிலும், பேட்டியிலும் பேசியதில்லை. இந்த நிலையில், வணங்கான் பட புரமோஷனுக்காக அளித்த பேட்டியின் போது அதுபற்றி முதன்முறையாக பேசி இருக்கிறார் பாலா. அதில் அவர் கூறியதாவது : “அது என் அறியாமையில் நடந்தது தான். அப்படியே இருந்தாலும் விஜய் வந்தா நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும். விஜய் என்னைவிட வயதில் மிகவும் இளையவர். அது கவனக்குறைவால் நடந்தது தான். வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்துவதற்காக அதை நான் செய்யவில்லை” என விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் விஜய்யுடனான தனது சந்திப்பு பற்றி கூறினார். அதில், விஜய்யை எனக்கு ரொம்ப புடிக்கும். ஒரு முறை விஜய்யை சந்தித்தபோது என் குழந்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென என் மகள் விஜய் மடியில் போய் உட்கார்ந்துட்டா. அவளுக்கு அப்போ விஜய் யாருன்னே தெரியாது. அவ்வளவு சின்ன வயசு. உடனே விஜய் தன்னிடம் இருந்த கேமராவை எடுத்து, என்னிடம் செல்பி எடுத்துக்கலாமா என கேட்டார். இந்த குணம் எனக்கு ரொம்ப பிடித்தது. அப்படிப்பட்டவரை நான் ஏன் இன்சல்ட் பண்ண போறேன்” எனக்கூறி பல வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாலா.

இதையும் படியுங்கள்...  கால்ஷீட் கொடுத்தாலும் கமல், ரஜினியுடன் படம் பண்ண மாட்டேன் - இயக்குனர் பாலா பளீச் பதில்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பான் வாடை அடிக்குதே... வா வாத்தியார் டிரெய்லர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கு?
திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்