இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா நிவாரணத்திற்கு நிதிஉதவி..! எவ்வளவு தெரியுமா?

By manimegalai aFirst Published May 14, 2021, 5:17 PM IST
Highlights

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் விதமாக, பல பிரபலங்கள் திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணத்திற்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், இயக்குனர் ஏ.ஆர் .முருகதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
 

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் விதமாக, பல பிரபலங்கள் திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணத்திற்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், இயக்குனர் ஏ.ஆர் .முருகதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தலை தூக்கிய, கொரோனா தொற்று... சற்று தணிந்திருந்த நிலையில், மீண்டும் இரண்டாவது அலையை துவங்கி முன்பை விட மக்களை கொடூரமாக தாக்கி வருகிறது. தமிழகத்தில் சுமார் ஒரு நாளைக்கு மட்டும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல், இரவு விகிதமும் அதிகரித்துள்ளதால், முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கை கடுமையாக்கியுள்ளார்.

மேலும், தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற கூடிய பேராயுதமாக இருக்கும் தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த முதவிகளை தாராளமாக செய்ய வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

இவரது கோரிக்கையை ஏற்று, நடிகர் சூர்யா, கொரோனா பணிக்காக முதல் ஆளாக வந்து உதவினார். அவரை தொடர்ந்து அஜித் 25 லட்சமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா கணவருடன் முதலமைச்சரை சந்தித்து, ரூ .1 கோடி வழங்கினார். இந்நிலையில் தற்போது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதலமைச்சரை சந்தித்து ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். மக்களின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் உதவி செய்து வருவதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 

click me!