நான்கு நாயகிகளை வைத்து படம் இயக்கம் தயாரான ஏ.எல்.விஜய்..! ஹீரோயின்கள் குறித்து வெளியான தகவல்..!

Published : Jun 05, 2021, 02:44 PM IST
நான்கு நாயகிகளை வைத்து படம் இயக்கம் தயாரான ஏ.எல்.விஜய்..! ஹீரோயின்கள் குறித்து வெளியான தகவல்..!

சுருக்கம்

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான கதைகளையும், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படங்களையும் இயக்கி ஹிட் கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். தற்போது பழம்பெரும் நடிகையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து, இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான கதைகளையும், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படங்களையும் இயக்கி ஹிட் கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். தற்போது பழம்பெரும் நடிகையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து, இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 
இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது பல இயக்குனர்களும் இயக்க போட்டி போட்டு வந்த, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில், ஜெயலலிதாவாக.. பிரபல பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர்ராக பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகலா பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட ஹீரோயின்..! செம்ம கியூட் பேபி..!
 

இந்த படத்தின் ரிலீஸ் தேதி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்... கொரோனா இரண்டாவது தாக்கம் தலை தூங்கியதால், படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மற்றொரு தேதிக்கு மாற்றியுள்ளனர். அதே போல், ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகி உள்ளதால்... ஓடிடியில் வெளியாக வாய்ப்பே இல்லை என்றும், திரையரங்கில் தான் படம் வெளியாகும் என படக்குழு வதந்திக்கு முற்று புள்ளி வைத்தது.

மேலும் செய்திகள்: மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் முதல்முறையாக புகைப்படம் வெளியிட்ட விமல்..! கொள்ளை அழகு...
 

இந்நிலையில் 'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாகி கொண்டே செல்வதால்,  தமிழ் தெலுங்கு, என இரண்டு மொழிகளில் ஓடிடி தளத்திற்கு ஒரு படத்தை இயக்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.   இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தில் நான்கு முக்கிய நடிகைகள் நடிக்க உள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்:'ஐயா' படத்தில் நயன்தாராவுக்கு பதில் நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகை!
 

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில்... நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகிய நான்கு நடிகைகள் நடிக்க உள்ளதாகவும், முக்கிய வேடத்தில்  பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் நடிக்க உள்ளாராம். இந்த திரைப்படம் ஓடிடிக்காக தயாராக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 

 

 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?