இளையராஜாவை விமர்சிக்க அருகதை வேண்டாமா? ஜேம்ஸ் வசந்தன் மன்னிப்பு கேட்கணும்.. சீரிய பிரபல இயக்குனர்!

Published : Mar 29, 2023, 01:14 PM IST
இளையராஜாவை விமர்சிக்க அருகதை வேண்டாமா? ஜேம்ஸ் வசந்தன் மன்னிப்பு கேட்கணும்.. சீரிய பிரபல இயக்குனர்!

சுருக்கம்

பிரபல இசையமைப்பாளரும், தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில், இளையராஜாவை மாதிரி ஒரு மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது என்பது போல், விமர்சித்தது... பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்க்கு பிரபல இயக்குனர் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இளையராஜாவை உயர்வாக பேசுவது போல் பேசி... ஏசு கிசுத்து குறித்து இளையராஜா சொல்லிய கருத்தை தான் மிகைப்படுத்தி பேசி இருந்தார்.  "அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா, ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா, வந்தாரா, உயிர்த்தெழுந்தாரா என்பது எனக்கு தெரியாதுனு சொல்லியுள்ளார். இது அவருக்கு தேவையா. ரமண மகரிஷி ஒருவர் தான் செத்து உயிர்த்தெழுந்தவர் என்பதை தான் செல்லி வருகிறோம். கொஞ்சமாது ஆன்மீக புரிதல் உள்ளவனாக இருந்திருந்தால், இப்படி பேசி இருக்க மாட்டார் என கூறி இருந்தார்.

மேலும் ஏசு கிறிஸ்துவ கோடிக்கணக்கான மக்கள் நம்புறாங்க. அப்போ அத்தனை பேரையும் காயப்படுத்தும் விதமாக இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பி இருந்தார். கே போல் ஒரு கூற்ற சொல்ல வருபவர் அதை மட்டும் சொல்லிவிட்டு செல்ல வேண்டியது தானே. அத்தனை பேரை கேலப்படுத்துகிற, ஒரு கேவலமான ஈன புத்தி இருக்குல்ல, அதுனால தான் அவரை மட்டமான மனிதர்னு நான் சொல்றேன்” பேசியது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த பாண்டியன் ஸ்டோர் தனம்..! குவியும் வாழ்த்துக்கள்..!

இவரின் கருத்துக்கு பலர் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்த நிலையில், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான "நினைவெல்லாம் நீயடா" படத்தை எழுதி இயக்கி வரும் ஆதிராஜன் மிகவும் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "தன்னை இசையமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்ளும் ஜேம்ஸ் வசந்தன் என்பவர் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், இசைஞானி இளையராஜாவை பற்றி மிகவும் மட்டமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். இசைஞானி இந்தியாவின் அடையாளம்.  சிறந்த ஆன்மிகவாதி. உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களில் 9 வது இடம் பிடித்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.  இளையராஜாவுக்கு நிகராக இன்னொருவர் பிறக்கவும் முடியாது... இசையில் சிறக்கவும் முடியாது. உலகமே கொண்டாடும் ஒரு இசைஞானியை ஒரு மிகச் சாதாரணமான... மறைமுகமாக ஊழியம் பார்த்து வயிறு வளர்த்து கொண்டிருக்கும் நாகரீகமற்ற ஜேம்ஸ் வசந்தன், மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி மத அரசியல் செய்யும் நோக்கத்துடன் விமர்ச்சித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. 

Keerthy Suresh Love: கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்! முதல் முறையாக மனம் திறந்த பெற்றோர்!

சென்னையைத் தாண்டினால் யார் என்றே தெரியாத இவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாய்க்கொழுப்பின் வெளிப்பாடு. அவர் பயன்படுத்திய வார்த்தைகளை கவனித்து பார்த்தால் அவர் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பேட்டி எடுப்பவர்" நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?" என்று கேட்கும்  போது கூட திமிர்த்தனமாக பதில் அளித்து இருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது.... இவர் யாரோ வீசிய  எலும்பு துண்டுக்குத்  தான் குரைத்திருக்கிறார் என்பது. இளையராஜா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுபவர் என்பது உலகறிந்த விஷயம். திறமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் புகழின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் வித்யா கர்வம் இருக்கத்தான் செய்யும். உனக்கு ஏன் எரிகிறது?. குறைகுடங்கள் எல்லாம் கூத்தாடித் திரியும் போது நிறைகுடம் ததும்பினால்தான் என்ன?

உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா..? சூரிய ஒளியில்... மேக்கப் போடாமல் மிளிரும் பேரழகில் நதியா லேட்டஸ்ட் போட்டோஸ்!

உண்மையிலேயே ஒருவரை விமர்சிக்க விரும்பினால் அடிப்படை நாகரீகம்  தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய சாதனையாளரை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இவ்வளவு மட்டமான வார்த்தைகளால் விமர்சிக்கும் உனக்கெல்லாம் பண்பாடு பற்றியும் பக்குவம்  பற்றியும் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? கோடான கோடி ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானியை இது போன்ற சில்லரைகள் சீண்டி பார்ப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியாவின் ஆகப்பெறும் அடையாளத்தை, விருதுகளுக்கெல்லாம் பெருமை சேர்த்த ஒரு மாமனிதரை... அவர் வாழும் காலத்திலேயே அசிங்கப்படுத்த நினைப்பவர்களை, என்னைப் போன்ற அவருடைய உண்மையான ரசிகர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜேம்ஸ் வசந்தன் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறு பரப்பும் வீடியோவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் இளையராஜா ரசிகர்கள், ஜேம்ஸ் வசந்தன் செல்லும் இடமெல்லாம் கூடிநின்று வசைமாரி பொழியும்  சூழ்நிலை உருவாகும்.

தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை சங்கங்களும் இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், பாரதிராஜா, பாலா, வெற்றிமாறன், சசிகுமார், உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வசந்தனின் வாய்க்கொழுப்பை கண்டிப்பாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் ஆதிராஜன் கூறியுள்ளார். இது தற்போது மீண்டும் திரையுலகில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி