“மாஸ்டர்” தியேட்டர் ரிலீஸ்... தாறுமாறு வைரலாகும் தனுஷின் மாஸ் ட்வீட்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 30, 2020, 12:23 PM IST
“மாஸ்டர்” தியேட்டர் ரிலீஸ்... தாறுமாறு வைரலாகும் தனுஷின் மாஸ் ட்வீட்...!

சுருக்கம்

இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தடையானது. 

 

இதையும் படிங்க:  பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த நயன்தாரா... பிரபல இயக்குநர் பரப்பிய வதந்தி பற்றி பரபரப்பு அறிக்கை வெளியீடு!

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், பணியாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பல தரப்பினரும் மிகப்பெரிய சரிவை சந்தித்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் ரகசியமாக சந்தித்தார். அப்போது தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும் படி கோரிக்கைவைத்துள்ளார். 

எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என ஆவலுடன் அனைவரும் காத்திருக்கின்றனர். சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான. ஆனால் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

 

இதையும் படிங்க:  “எப்போதும் எங்கள் மகாராணி”... பாட்டியுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து ஜி.வி.பிரகாஷ் உருக்கம்...!

இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. விஜய் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி ரிலீசாகிறது என்பது சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகத்தான செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் தியேட்டரில் படம் பார்க்கும் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க இது உதவும் என நான் நம்புகிறேன்.  திரையரங்கில் படம் பார்ப்பது போல அனுபவத்தை வேறு எந்த தளங்களாலும் தரவே முடியாது என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?