'நானே வருவேன்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான வீரா சூரா வெளியானது!

By manimegalai a  |  First Published Sep 7, 2022, 10:48 PM IST

நடிகர் தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் 'நானே வருவேன்' திரைப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான வீரா சூரா பாடல் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 
 


நடிகர் தனுஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இதுவரை தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள், வசூல் செய்திடாத அளவிற்கு வசூலை வாரி குவித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தனுஷ் அடுத்தடுத்த படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் ரிலீசாக உள்ள 'நானே வருவேன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது .

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: பிரபல நடிகையை கரம் பிடித்த 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீகணேஷ்!

காரணம் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். 'நானே வருவேன்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளிலும் படக்குழு படு வேகம் காட்டி வருகிறது. இன்று மாலை, 'நானே வருவேன்' படத்தில் இடம்பெற்ற 'வீரா சூரா' பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்ததை தொடர்ந்து, தற்போது அந்த பாடல் வெளியாகி தனுஷ் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: உங்க கூட குழந்தை பெத்துக்கணும்.. No சொல்லவே கூடாது.. ரவீந்தரிடம் மஹாலட்சுமி போட்ட கண்டீஷன்! இது தான் காரணமாம்!

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தற்போது வெளியாகியுள்ள பாடலை அவரே கம்போஸ் செய்து பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு இயக்குனர் செல்வராகவன் லிரிக்ஸ் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவுடன், வீரா சூரா பாடலை  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான முத்துச் சிப்பியும் பாடியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ், நல்லவராகவும் கெட்டவராகவும் இரு கெட்டப்பில் நடித்துள்ள இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யோகி பாபு காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் இன்றி முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!