தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ் லுக் - டீசர் வெளியீடு குறித்த மாஸ் தகவலை வெளியிட்ட படக்குழு!

By manimegalai a  |  First Published May 10, 2023, 5:18 PM IST

நடிகர் தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு குறித்த முக்கிய தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 


கர்ணன், அசுரன், திருச்சிற்றம்பலம், வாத்தி, என தனக்கான ஸ்டைலில், தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தேடிப் பிடித்து நடித்து வருகிறார் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே சுமார் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.

வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது தனுஷ்... இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியாடிக் கதையம்சம் கொண்ட, 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன் உள்ளிட்ட பல முக்கிய வேடத்தில்  நடித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

ஆசைக்கு அளவு வேண்டாமா? ஒரே ஒரு ஹிட்... தாறுமாறா சம்பளத்தை உயர்த்திய கவின்! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் எடுக்கப்பட்டு வரும் 'கேப்டன் மில்லர்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மிகப்பெரிய போர்டுசெலவில்  தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு காடு மற்றும் மலைப்பகுதிகளை ஒட்டி உள்ள இடங்களில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மாதம்... மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், உரிய அனுமதியின்றி படபிடிப்பு நடத்தப்பட்டதாக கூறி, படப்பிடிப்பை நடத்த தடை விதித்தார் மாவட்ட ஆட்சியர்.

மேலும் இப்படத்திற்காக போலியான துப்பாக்கிகள், மற்றும் குண்டுகள் போன்றவை பயன்படுத்துவதாலும், அதிக அளவில் சத்தம் எழுப்பப்படுவதாலும் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இதன்காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில்  15 நாட்களுக்கு பின், அனுமதி பெற்று மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. பல்வேறு நிபந்தனைகளோடு ஆட்சியர் ரவிச்சந்திரன் படப்பிடிப்பை நடத்த அனுமதியளித்தார்.

உடல் எடை கூடி... வேற மாதிரி லுக்கில் மிரள வைக்கும் சூர்யா! ரசிகர்களை ஆச்சர்யப்படவைத்த லேட்டஸ்ட் புகைப்படம்!

இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகார பூர்வமாக சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது படக்குழு. அதன்படி தற்போது வெளியாகி உள்ள தகவலில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதமும் டீசர் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது

Wishing the Inspiration of youth , our many more years of success 🤗♥️ 's
FIRST LOOK - June 2023
TEASER - July 2033 pic.twitter.com/TZHYEDO5q8

— Sathya Jyothi Films (@SathyaJyothi)

 

click me!