
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சனோன். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சனோன். இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சனோன்.
ஆதிபுருஷ் படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், கீர்த்தி சனோனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களது திருமண நிச்சயதார்த்தம் மாலத்தீவில் நடக்க உள்ளது என்றெல்லாம் வதந்திகள் பரவின. பின்னர் இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை கீர்த்தி சனோன், பிரபாஸ் உடனான காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படியுங்கள்... பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் லாஞ்ச் Exclusive போட்டோஸ் இதோ
தற்போது ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் சீதா போலவே உடையணிந்து வந்திருந்த நடிகை கீர்த்தி சனோன், இந்த விழாவில் செய்த செயல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
நடிகை கீர்த்தி சனோன் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்ததும், அவர் அமர இருக்கைகள் எதுவும் காலியாக இல்லாததால், சட்டென தரையில் அமர்ந்து கொண்டார். பின்னர் அருகில் இருந்த பத்திரிகையாளர்கள் எழுந்து கீர்த்தி சனோனுக்கு இருக்கையில் இடம் கொடுத்தும் அவர் மேலே அமர மறுத்துவிட்டார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் அதனை ட்ரோல் செய்து வருகின்றனர். கீர்த்தி சனோன் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்துள்ளதாக சாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஆதிபுருஷ் பட விழாவிற்கு 24 கேரட் தங்கத்தால் ஆன சேலையை அணிந்து வந்த கீர்த்தி சனோன் - அதன் விலை இவ்வளவா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.