பிசிஆர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? - நெல்லையில் திரைப்பட இயக்குனர் ஆறுபாலா பரபரப்பு பேட்டி

By Ganesh AFirst Published May 10, 2023, 11:39 AM IST
Highlights

கடல், திரௌபதி, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆறுபாலாவின் இயக்கத்தில் வெளியாகும் போர்குடி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நெல்லை ராம் திரையரங்கில் நடைபெற்றது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஆரஞ்சு மிட்டாய், திரெளபதி, தேவராட்டம், கடல், ஆயிரத்தில் ஒருவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஆறுபாலா. இவர் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக், நடிகை ஆராத்யா ஆகியோர் நடிப்பில் செந்தமிழ் இசையில் போர்க்குடி என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்றது . 

இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் சுரேஷ் திரைப்படத்தின் இசைத்தட்டை வெளியிட அதனை ராமநாதபுர சமஸ்தானத்தின் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி  பெற்றுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்... காணாமல் போன முக்கிய பொருள்... ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்

தயாரிப்பாளர் வில்லியம்ஸ் அலெக்சாண்டர், ஶ்ரீவைகுண்டம் சுரேஷ், VKP சங்கர் Dr. தாமஸ், அஸ்வின், நடிகர் RS கார்த்தி, நடிகை ஆராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டைரக்டர் ஆறு பாலா பேசுகையில், "வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால் இரு சமூக மக்களிடையே ஏற்படும் இழப்புகளை தான் இப்படம் முக்கியமாக சொல்ல வருகிறது. அதே போல ஆதிக்க சாதி அதிகார வர்க்கம் ஆணாதிக்க சமூகம் என்ற குற்றச்சாட்டுகளை வைத்து மேலும் இந்த சமூகத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேலும் பாதாளத்திற்கு தள்ளும் முயற்சியை எதிர்த்து இந்த படம் பேசுகிறது. 

அனைத்து சமூகமும் தங்களுடைய இழப்புகளை திரையில் காட்டி தங்களுடைய நியாயத்தை புரிய வைக்க எடுக்கும் முயற்சி போல் இந்த சமூகத்திற்கான இழப்புகளையும் நியாயத்தையும் புரிய வைக்கும் முயற்சிதான் இந்த போர்குடி படமாகும் . தாய் வழி சமூகமான இச்சமூகத்தின் ஒரு தாய் மனநிலையை இந்த படம் பேசுகின்றது .  இந்த மக்களின் பொருளாதார நிலையை எடுத்து பேசுகின்ற படம் ஆகும். இது மாபெரும் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... அது உங்க பேத்தி மாதிரி... 600 மார்க் எடுத்த மாணவியை இப்படி சொல்லலாமா! வைரமுத்துவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்

click me!