ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : May 10, 2023, 12:57 AM IST
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 

மிக அரிதாக, படம் குறித்தான அறிவிப்பிலேயே வெற்றியைப் பதிவுசெய்யும் சில கூட்டணி உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ், யூத் ஐகான் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ பட வெளியீடும் இந்த வெற்றியை முன்கூட்டிய தெளிவாக காட்டியுள்ளது. சரியான திட்டமிடல் மற்றும் சரியான நேரத்தில் படத்தை முடித்தது என ஒட்டுமொத்த குழுவும் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். இப்படம் ஜூன் 2, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். 

'கேம் சேஞ்சர்' படத்தின் கிளைமேக்ஸ் நிறைவு..! நாளை முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தும் ஷங்கர்!

முதல் சிங்கிள் 'தண்டர்காரன்' ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதோடு எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்கள் என வலுவான ரசிகர் பட்டாளம் இருப்பதால், படத்தில் அவரது இருப்பும், ஏ.ஆர்.கே.சரவனின் புதுமையான கதைசொல்லலும் பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு நம்புகிறது.

படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டும் இன்றி, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபக் டி மேனன், ஒளிப்பதிவில்...: ஜி.கே. பிரசன்னா, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் ‘வீரன்’ படத்தை வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரித்துள்ளனர். பிரபல விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!