லுங்கி, பனியனில் கையில் வாளுடன் செம்ம டெரர் காட்டும் தனுஷ்... தரமான சம்பவம் காத்திருக்கு....!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jan 29, 2020, 11:39 AM IST

இந்நிலையில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் D40 படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அதே வேகத்தில் பரியேறும் பெருமாள் புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நடைபெற்று வருகிறது. மாரி - தனுஷுன் கூட்டணி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

கலைப்புலி தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை  தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகி வருகிறது. 

இதையும் படிங்க: ஆத்தாடி இவ்வளோ பெருசா இருக்கே... அருண் விஜய் வீட்டு பக்கம் போறீங்களா..? சூதானமா போங்க..!

இந்நிலையில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லுங்கி, பனியன் அணிந்திருக்கும் தனுஷ், மலை உச்சியில் கையில் வாளுடன் நிற்கும் போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது. மேலும் ஷூட்டிங் வேகமாக நடந்து வருவதையும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 

shoot in progress pic.twitter.com/YkjaaoIrgC

— Dhanush (@dhanushkraja)

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை... யூகிக்க முடியாத மாற்றம்... பர்த்டே பேபி ஸ்ருதி ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு...! 

தனுஷின் ட்வீட்டை பார்த்த, இயக்குநர் மாரி செல்வராஜ், அவனே அன்பின் கொடை என ட்வீட் செய்துள்ளார். கையில் வாளுடன் செம்ம டேரர் போஸில் நிற்கும் தனுஷை பார்க்கும் போது, அவரது ரசிகர்களுக்கு கர்ணன் படத்தில் தரமான சம்பவம் காத்திருப்பது போன்று தெரிகிறது. 

click me!