
விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை தட்டிச் சென்றவர் முகேன் ராவ். இவருடைய தந்தை நேற்று மாலை 6 : 20 மணியளவில், மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள விஷயம் முகேன் ரசிகர்களையும், அவருடைய குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முகேன் ராவ்வின் தந்தை பிரகாஷ் ராவ். 52 வயதாகும் இவர், தன்னுடைய மகள், மனைவி, மற்றும் மகனுடன் வசித்து வந்தார். பல்வேறு கஷ்டங்கள் வந்த போது கூட, ஒவ்வொரு தருணத்திலும் ஒரு தந்தையாக முகேன் ராவ்விற்கு உறுதுணையாக இருந்தார்.
முகேன் ராவ்விற்கு பாடல்கள் மீது ஆர்வம் வர காரணமும், அவருடைய தந்தை பிரகாஷ் ராவ்தான். முகேன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒரு இண்டிபெண்டண்ட் சிங்கராக பாடி, நடித்த ஆல்பம் பாடல்கலான 'போகிறாய்' மற்றும் 'அபிநயா' ஆகியவை சமூக வலைத்தளத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முகேன் தந்தை பிரகாஷ் ராவ், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ரசிகர்கள் பலர் தொடருந்து முகேன் ராவின் தந்தைக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேனை ஒன்சைடாக காதலித்த பிக்பாஸ் அபிராமி இந்த செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார். முகேனின் சோகத்தை கேள்விப்பட்டு, கதறி துடிப்பதை உணர்த்தும் விதமாக கண்ணீர் வடிக்கும் இமோஜியுடன் பிரகாஷ் ராவ் ஆத்மா சாந்தியடைய இரங்கலும், தைரியமாக இரு பேபி என்றும் முகேனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.