கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், விஜயகாந்த் மறைவுக்கு பாடல் பாடி அஞ்சலி செலுத்தினார்.
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவராஜ்குமார், நடிகர் சந்தீப் கிஷான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உள்பட கேப்டன் மில்லர் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இரண்டு நடிகர்களின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலாவதாக அண்மையில் மரணமடைந்த நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள்... 'கேப்டன் மில்லர்' பட விழாவில் சிவராஜ் குமாருடன் ஸ்டேஜில் டான்ஸ் ஆடி தெறிக்கவிட்ட தனுஷ்! வைரலாகும் வீடியோ!
இதையடுத்து மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர் நடிகர் ஷிவராஜ்குமாரின் சகோதரர் ஆவார். இதுமட்டுமின்றி நடிகர் தனுஷ் மேடையில் பேச வரும்போது, கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பாடல் மூலம் அஞ்சலி செலுத்தினார். கேப்டனின் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இடம்பெறும் ராசாவே உன்ன காணாத நெஞ்சு பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார்.
அந்த பாடலை தனுஷ் உடன் சேர்ந்து அங்கு வந்திருந்த ரசிகர்களும் பாடி விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் தனுஷ், விஜயகாந்த் மறைவின் போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லண்டன் சென்றிருந்தார். இதன்காரணமாக விஜயகாந்தின் உடலுக்கு அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இந்த நிலையில், கேப்டன் மறைவுக்கு பின் தான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியில் கேப்டனுக்காக தனுஷ் செய்த இந்த செயல் காண்போரை நெகிழச் செய்தது.
Raasave Unna ❤️🩹 pic.twitter.com/omod6lbzVt
— Anbu (@Anbu_28)இதையும் படியுங்கள்... 'கேப்டன் மில்லர்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் போட்டோஸ்!