'கேப்டன் மில்லர்' பட விழாவில் சிவராஜ் குமாருடன் ஸ்டேஜில் டான்ஸ் ஆடி தெறிக்கவிட்ட தனுஷ்! வைரலாகும் வீடியோ!

By manimegalai a  |  First Published Jan 3, 2024, 10:56 PM IST

தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் படவிழாவில், தனுஷ் மேடையில் ஏறி டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
 


நடிகர் தனுஷ் இதுவரை ஏற்று நடித்திடாத, வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம், 'கேப்டன் மில்லர்'. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்.. இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவென்ட் மிகப் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் தன்னுடைய இரண்டு மகன்கள், மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் கலந்து கொண்டார். மேலும்  இப்படத்தின் நாயகி பிரியங்கா மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், காளி வெங்கட், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், உள்ளிட்ட ஒட்டுமொத்த பட குழுவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tap to resize

Latest Videos

சூர்யா திருமணத்திற்கு விஜயகாந்தை அழைக்க சென்ற சிவகுமார்! வர முடியாது என கூறிய கேப்டன்.. ஏன் தெரியுமா?

Anoushka Ajith: அப்பா அஜித்துடன்.. அழகு இளவரசி அனோஷ்காவின் அல்டிமேட் பர்த்டே! ஷாலினி பகிர்ந்த போட்டோஸ்!

கேப்டன் மில்லர் பட விழாவில் கலந்து கொண்ட சிவராஜ் குமார்...  இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து, ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர் இப்படத்தில் தனுஷ் மற்றும் சிவராஜ் குமார் இணைந்து இப்படத்தில் ஆட்டம் போட்டுள்ள 'கொரானாரே' பாடலுக்கு மேடையில் நடனம் ஆடவேண்டும் என ரசிகர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில்... இருவரும் மேடையில், இணைந்து டான்ஸ் ஆடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Moment of the Day 🤩 pic.twitter.com/zygPkpxMf7

— งเຖ๏tђ ēຖ๏ςк 🎧 (@EnockVinoth)

 

click me!