‘கர்ணன்’ படத்தின் புது அப்டேட்... நாளை தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து...!

Published : Feb 17, 2021, 06:56 PM IST
‘கர்ணன்’ படத்தின் புது அப்டேட்... நாளை தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து...!

சுருக்கம்

தற்போது இந்த படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் நாளை 8 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

“பரியோறும் பெருமாள்” படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த மாரிசெல்வராஜ் உடன் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் கர்ணன். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங்கின் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்தடுத்து படங்களில் காமிட்டாகியுள்ளதால் படு பிசியாக இருக்கும் தனுஷ், கையோடு கர்ணன் டப்பிங் பணிகளையும் முடித்து கொடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு புகைப்படத்துடன் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

படத்தின் டீசர், டிரெய்லர் போன்ற அப்டேட்களை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி அன்று, கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முகத்தில் ரத்தம் வழிய, கையில் விலங்குடனும் கண்ணில் கனல் தெறிக்கும் கோபத்துடனும் நிற்கும் தனுஷின் கர்ணன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது. அத்துடன் படத்தை ஏப்ரல் 9ம் தேதி வெளியிட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

தற்போது இந்த படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் நாளை 8 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #KarnanFirstSingle ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Trisha : சுதந்திர தின விழாவில் த்ரிஷா... சல்யூட் அடித்த முதல்வர் விஜய் - வைரலாகும் போட்டோஸ்
Magudam Movie Day 1 Box Office : விஷாலின் மகுடம் முதல் நாளே வசூலை வாரிசுருட்டியதா? வாஷ் அவுட் ஆனதா?